Type Here to Get Search Results !

இலங்கையின் ஆறுகள்/ Rivers Sri Lanka



இலங்கையின் ஆறுகள் நாட்டின் மத்திய உயர்நிலத்தில் இருந்து ஊற்றெடுத்துப் பாய்கின்றன. 1959 ஆண்டு ஆய்வொன்றின் படி இலங்கையில் மொத்தம் 103 ஆறுகள் காணப்படுகின்றன. இவற்றுள் 10 ஆறுகள் முக்கியமானவையாகும். 
.
மகாவலி கங்கை மிக நீளமான ஆறாகும். இலங்கையின் முக்கிய ஆறுகளில் கலா ஓயா மாத்திரமே உயர்நிலமல்லாத குளம் ஒன்றில் இருந்து ஊற்றெடுத்துப் பாய்கிறது. இலங்கையின் ஆறுகளில் களு ஆறு, களனி ஆறு, ஜின் ஆறு, நில்வல ஆறு, மகாவலி கங்கை என்பன வெள்ளப்பெருக்கு அபாயத்துக்கு உட்பட்டவையாக கருதப்படுகின்றன
 
இலக்கம் ஆற்றின் பெயர் நீளம் ஊற்றெடுக்கும் இடம்  முடியும் இடம்
  01  மகாவலி ஆறு   335 கி.மீ   பீதுறுதாலகால      திருகோணமலை
02 அருவி ஆறு  164 கி.மீ மத்திய மலைநாடு மன்னார்
03 கலா ஓயா   148 கி.மீ  மாத்தளை     புத்தளம்
04 களனி ஆறு  145 கி.மீ சிவனொளிபாத மலை கொழும்பு
05 யான் ஆறு 142 கி.மீ  மத்திய மலைநாடு  
06 தெதரு ஆறு 142 கி.மீ  மாத்தளை     சிலாபம், புத்தளம்
07 வளவை ஆறு  138 கி.மீ  ஹட்டன் சமவெளி     அம்பாந்தோட்டை
08 மாதுரு ஓயா 135 கி.மீ பதுளை      
09 மகா ஆறு 134 கி.மீ  மத்திய மலைநாடு   
10  களு ஆறு 129 கி.மீ    சிவனொளிபாத மலை     களுத்துறை
11 கிரிந்தி ஆறு  117 கி.மீ மத்திய மலைநாடு   
12    கும்புக்கன் ஆறு 116 கி.மீ மத்திய மலைநாடு   
13 மாணிக்க ஆறு   114 கி.மீ   பஸ்சரை மலைகளின் தெற்குச் சாய்வில்   அம்பாந்தோட்டை
14 ஜின் ஆறு  113 கி.மீ  அம்பாந்தோட்டை அம்பாந்தோட்டை
15 மீ ஆறு 109 கி.மீ மத்திய மலைநாடு     புத்தளம்
16  கல் ஓயா        
 
108 கி.மீ பதுளை     மட்டகளப்பு

   

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.